Friday, August 8, 2008

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்-பா.ம.க. தலைவர் கோ.க.மணி

சமூகநீதி அனைவரையும் சென்றடைய தொகுப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில ஒவ்வொரு குடும்பத்தையும் சமூக நீதி சென்றடைய வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பங்கீடு கிடைக்க வேண்டும். அதற்கு தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.

அதாவது, தற்போது ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள இட ஒதுக்கீட்டை பிரித்து அதில் உள்ள சாதிகளுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் பங்கிட்டு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இதற்காக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். இதே ஒதுக்கீட்டு முறையை பதவி உயர்வுகளுக்கும் வழங்க வேண்டும். தற்போது இந்த முறை கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் "கிரீமிலேயர்' முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
நன்றி தினமணி, 08.08.2008

2 comments:

Anonymous said...

பா.ம.க. தொண்டனை ஒரு அன்பு உள்ளம் வாழ்த்துகிறது.தொடரட்டும் உங்கள் சேவை.பாராட்டுக்கள்

அரியாங்குப்பத்தார் said...

வாழ்த்திற்கு நன்றி!