தமிழகத்தில் மாற்றத்துக்கு, மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத்துள்ள தலைவர்கள் வழிகாட்ட வேண் டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.
நாத்திகம் இதழின் 50-வது ஆண்டு விழாவில் அவர் பேசிய தாவது: நமது மண், ஆறுகள், குளங்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து வருகிறோம். நமது இளைஞர்கள் மது, திரைப்படங்க ளால் சீரழிந்து வருகின்றனர்.
இதை எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் நாமும் இல்லை. அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.
நாத்திகம் இதழின் 50-வது ஆண்டு விழாவில் அவர் பேசிய தாவது: நமது மண், ஆறுகள், குளங்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து வருகிறோம். நமது இளைஞர்கள் மது, திரைப்படங்க ளால் சீரழிந்து வருகின்றனர்.
இதை எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் நாமும் இல்லை. அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.
இதை மாற்றவில்லையெனில், நமது முன்னோர்கள், தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விடும். இல்லையெனில், தமிழர்களுக்கு விமோசனமே இல்லை. தமிழகத்தில் 4 தலைமு றைக்கு இளைஞர்கள் பலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமி ழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஓர் ஆய்வு தெரி விக்கிறது.
தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வறட்டுக் கூச்சலாகத்தான் உள்ளது. சிற்றூர்களில் கூட பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை உள்ளது.
அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெ னில், தமிழ்வழியில் தரமான, கட்டாய, சமச்சீரான கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் சென்னை முதல் கடலூர் வரை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங் கிக் குவிக்கின்றனர். இந்த மனை விற்பனை தமிழகம் முழுவதும் இனி தொடரும்.
நமது மண், மொழியை மட்டு மன்றி மீனவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
இதையெல்லாம் மாற்றுவதற்கு வேறு என்ன வழி என்று தலைவர் கள் சிந்திக்க வேண்டும். இதற் கான மாற்று வழியை தலைவர் கள் கூறினால் அதை பின்பற்ற லாம்.
ஒரு காலத்தில் மத்தியில் கூட் டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசிப் பேசி அவர்களின் தொண் டை கூட வறண்டுவிட்டது.
இதற்காகப் போடாத மாநாடுகள் இல்லை.
ஆனால், இன்று ஒரு பள் ளியோ அல்லது மருத்துவமனை யைத் தொடங்க வேண்டும் என் றால் கூட தில்லிக்கு தான் கோப்பு களைக் கொண்டு செல்ல வேண் டிய நிலை உள்ளது. மாநில சுயாட்சி அந்த அளவுக்கு உள் ளது. இதை யோசிக்க வேண்டும்.
எனவே, இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத் துள்ள தலைவர்கள் கூடிப் பேசி வழிகாட்ட வேண்டும் என்றார் ராமதாஸ்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக் கண்ணு, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், நாத்திகம் இதழின் நிறுவனர் நாத் திகம் ராமசாமி, தமிழருவி மணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment