Monday, January 12, 2009

அரசியல் தீர்வு என்ன என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும்-மருத்துவர் இராமதாசு

சென்னை, ஜன.13-இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக எடுக்க வேண்டிய அரசியல் தீர்வு என்ன என்பதை இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்து பேசினார்கள்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்கு பின், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் வெளியே வந்தனர். முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-போர் நிறுத்தம்

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது ராணுவம் குண்டு மழை பொழிகிறது. தமிழர்கள் அங்கே அழிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் போரை தடுக்க வேண்டிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினோம்.


ஏற்கனவே, இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி எடுத்த முயற்சிக்கு மத்திய அரசு எந்த மரியாதையும் தரவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்கா, நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகளும் வலியுறுத்துகின்றன.

அறிக்கை வெளியிடுங்கள்
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் இதையே வலியுறுத்தியுள்ளார். 7 கோடி தமிழர்களின் முடிவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவர சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடன் பேசி, அது தொடர்பான அறிக்கையும் வெளியிடுங்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கூறியுள்ளோம். முதல்-அமைச்சர் கருணாநிதியும் உடனே பேசுவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் தீர்வு வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்துகிறது. இலங்கை அரசும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், என்ன அரசியல் தீர்வு என்பதை இலங்கை அரசு இதுவரை சொல்லவில்லை. அதை உடனே தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியதாவது:-
இலங்கையில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்று, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். யாரையோ எதிர்கிறோம் என்று அங்குள்ள தமிழர்களை எதிர்க்கிறார்கள். தமிழர்கள் அங்கே அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அங்கே போர் நிறுத்தம் வேண்டும். தமிழர்கள் பாதுகாப்புதான் நிரந்தரம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-
இலங்கையில் வாழும் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற இந்திய அரசு தவறினால், அது காங்கிரசுக்கு வரக்கூடிய தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் எடுத்து சொன்னோம். அவரும், மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி: தினத்தந்தி

4 comments:

Mugundan | முகுந்தன் said...

வணக்கம் அரியாங்குப்பத்தார்,

பா.ம.க கூட இதுவரை திடமான முடிவு எடுக்கவில்லை.
அய்யா, கூட சோனியாவிடம் கெஞ்சும் நிலைக்கு போனது
தலை குனிய வைக்கும் செயல்.

ஈழத்தமிழனிடம் உண்மையான அக்கறை இருந்தால்,அரசில்
இருந்து வெளிவந்திருக்க வேண்டும்.

பா.ம.க பதவி சுகத்தை
அனுபவிக்க முயல்வதாகவே தெரிகிறது.

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

அரியாங்குப்பத்தார் said...

தமிழகத்தில் தேர்தல் அரசியலை தேர்ந்தெடுத்த எந்தவொரு அரசியல் கட்சியும் வேகமாக செயல்படமுடியாது.

தமிழகத்தில் இவர்களாவது இப்படிப்பட்ட வேலையை செய்கிறார்களே என்ற அளவில் ஆறுதல் அடையலாம்.


தமிழகத்தில் தமிழின உணர்வாளர்கள் அதிகம் உள்ள இயக்கங்களாக பா.ம.க., வி.சி, தி.க., பெ.தி.க. போன்றவை இருந்தாலும் இவைகள் தமிழகத்தில் சிறிய கட்சிகள்தான். இவர்கள் சிறிய கட்சிகளாக இருந்தாலும் தன் கடமை உணர்ந்து செயலாற்றுகிறார்கள்.

இயல்பாக உருவாகின்ற அல்லது சிறிய அமைப்புகள், சிறிய கட்சிகள் உருவாக்குகின்ற தமிழின எழுச்சியை தனதாக்கிக்கொள்ளத்தான் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் முனைகின்றன. மற்றபடி தமிழகத்தில் உள்ள ஆண்ட ஆளும் கட்சிகள் தானக முன்வந்து தமிழின உரிமைக்காக இன்றுவரை குரல்கொடுக்க முனையவில்லை என்பதை தமிழர்கள் உணரவேண்டும்.

தமிழின துரோகிகளும், பகைவர்களும், தமிழினத்திற்கு எதிரான தினமலர், தி இந்து போன்ற ஊடகங்களும், சிங்கள கைக்கூலிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. இதை உணர்ந்து உலகத்தமிழர்கள் அனைவரும் தங்களுடைய கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், பொழுதுபோக்குகள் அனைத்தையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு தமிழீழம் அமைய தன்னளவிலாவது சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

Anonymous said...

சிவ சங்கரமேனனின் வேலைக்காரர்,
ராஜபக்சேவின் வேலக்காராருடன்
நாய்,நன்றியுள்ள நாய் என்பது பற்றிப் பேசியபின் பிரனாப் என்ற நாய் பற்றியும் பேசுவார்களாம்.
சோனியா அம்மையாரின் ரத்த தாகம் அடங்க ராஜபக்சே உத்தரவாதம் தரப்போகிறாராம்.
இந்த லட்சணத்தில் அவருக்குக் கடிதம் எழுதி பேப்பரையும்,தபால் தலையையும் வீணாக்க வேண்டாம்.