Monday, January 5, 2009

தமிழர்களையும் தமிழக சட்டமன்றத்தையும் இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது: மருத்துவர் இராமதாசு

சென்னையில் நேற்று ஊடகவியலாளர்களை மருத்துவர் இராமதாசு சந்தித்தார். இச்சந்திப்பின்போது “நாங்கள் எங்கள் சுயமரியாதையை இழந்து இருக்கிறோம். வெட்கத்தால் தலை குனிகிறோம்.” என குறிப்பிட்டார்.

“இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும், இந்திய அரசு தலையிட்டு அமைதி தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டு முறை தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

38 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து நேரில் வலியுறுத்தியிருக்கிறோம். மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என்று எத்தனையோ வழிகளில் போராடியிருக்கிறோம். ஆனாலும் இந்திய ஆட்சியாளர்களின் மனமிரங்கவில்லை.

தமிழர்களையும், தமிழ் மக்களையும், தமிழக சட்டமன்றத்தையும் இந்திய அரசு அவமானப்படுத்தி விட்டது.

இலங்கை பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் பிரதமரை சென்று சந்தித்தோம். அதன் பின் பல போராட்டங்கள். ஆனால் இப்போது முதல்-அமைச்சர் கருணாநிதி மவுனமாகவே இருக்கிறார்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். எங்கள் கட்சியை பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமோ, வன்முறை இயக்கமோ அல்ல. அது விடுதலைக்காக போராடும் போராட்ட இயக்கம்.

இந்திய அரசில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள், அதிகாரிகள் இலங்கை தமிழர்கள் அழிய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதனால் அவர்கள் இலங்கை பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட தடையாக இருக்கின்றனர்.

இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலை குறித்து அறிவிப்போம்.

என மருத்துவர் இராமதாசு மேலும் குறிப்பிட்டார்.

2 comments:

Anonymous said...

அப்புறம் இன்னும் எதுக்கு அங்க பதவியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார். சூடு சொரணை இருந்தால் தூக்கி கடாசி விட்டு வர வேண்டியது தானே.

இவருடைய இந்த டகால்ட்டி வேலையெல்லாம் வெளுத்து ரொம்ப நாளாகிவிட்டது.

Anonymous said...

Why PMK is continuing in central Govt?

it is because money is different and policy is different.